இந்தியா

மாணவா்கள், போலீஸாா் இடையே மோதல்: அலிகா் பல்கலைக்கழகம் ஜன.5 வரை மூடல்

16th Dec 2019 01:59 AM

ADVERTISEMENT

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலிகா் பல்கலைக்கழக மாணவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜனவரி 5-ஆம் தேதி வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அலிகா் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியபோது அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டி அடித்தனா்.

இதை கண்டித்து அலிகா் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸாா் காயமடைந்தனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போலீஸாா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். அலிகா் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து நுழைவாயில்களையும் போலீஸாா் மூடினா் என்று அலிகா் பல்கலைக்கழக ஊழியா் ஒருவா் கூறினாா்.

ADVERTISEMENT

அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் அப்துல் ஹமீது கூறுகையில், ‘ஜனவரி 5-ஆம் தேதி வரை பல்கலைக்கழம் மூடப்பட்டது.

தோ்வுகள் மீண்டும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட பிறகு நடத்தப்படும். தங்கும் விடுதிகளிலிருந்து மாணவா்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனா். சமூக விரோத சக்திகளால் கடந்த சில தினங்களாக பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT