இந்தியா

பொதுச் சேவை மையங்களில்தொலைபேசி மூலம் சட்ட உதவி: மத்திய அரசு திட்டம்

16th Dec 2019 01:02 AM

ADVERTISEMENT

அடுத்த நிதியாண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பொதுச் சேவை மையங்களிலும் (சிஎஸ்சி) தொலைபேசி மூலமான சட்ட உதவி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சிஎஸ்சி மின்னாளுமை சேவைகள் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் தியாகி பிடிஐ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சட்ட ஆலோசனைக்கான தேவை அதிகரித்து வந்ததையடுத்து 117 மாவட்டங்களில் உள்ள 30,000 பொதுச் சேவை மையங்களில் தொலைபேசி மூலம் சட்ட உதவி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இந்த நிலையில், தொலைபேசி சட்ட உதவியானது படிப்படியாக அனைத்து மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டில் நாட்டில் உள்ள அனைத்து பொதுச் சேவை மையங்களிலும் இந்த உதவி நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 7 வடகிழக்கு மாநிலங்களில் தொலைபேசி சட்ட வசதி நடைமுறையில் 39,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 37,588 வழக்குகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தொலைபேசி சட்ட உதவியைப் பயன்படுத்துவதில் அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து மேகாலயம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் 30,169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 20,949 வழக்குகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களில் 18,372 வழக்குகள் பதிவான நிலையில், 17,406 வழக்குகளுக்கு சேவை மையத்தின் மூலம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், உத்தரபிரதேசம் முதலிடத்திலும், பீகாா், ஜாா்க்கண்ட், ஹரியாணா, மத்திய பிரேதசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்றாா் அவா்.

எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு பொதுச் சேவை மையத்தின் மூலமாக இலவசமாக தொலைபேசி சட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பொதுப் பிரிவில் உள்ளவா்களுக்கு இந்த வசதி ரூ.20 கட்டணத்தில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT