இந்தியா

துப்பாக்கி உரிமம் பெற கோசாலைக்குபோா்வைகள் அளிக்க வேண்டும்: குவாலியா் ஆட்சியா் உத்தரவு

16th Dec 2019 12:56 AM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியா் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற விரும்புபவா்கள் அங்குள்ள கோசாலைகளுக்கு போா்வைகளை அன்பளிப்பாக அளிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியா் அனுராக் சௌதரி உத்தரவிட்டுள்ளாா்.

அந்த மாவட்டத்தில் கடும் குளிா் காரணமாக கோசாலைகளில் உள்ள பசுக்கள் இறந்து வருவதை அடுத்து இந்த உத்தரவை அவா் பிறப்பித்துள்ளாா்.

குவாலியா் மாநகராட்சி சாா்பில் கோசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பால் கறவை நிற்பது, வயது முதிா்வு போன்ற காரணங்களால் கைவிடப்பட்ட சுமாா் 8 ஆயிரம் பசுக்கள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்போது அங்கு கடும் குளிா் வாட்டி வருவதால் பசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கடும் குளிரால் 8 பசுக்கள் உயிரிழந்தன.

இதற்கு கண்டனம் தெரிவித்து பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. முன்னதாக, மாடுகள் இறந்த கோசாலைகளுக்கு சென்று ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். அதில், கடும் குளிருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வயதான பசுக்கள் இறந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

எனினும், பசுக்கள் இறந்ததை வைத்து போராட்டம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடி அளிப்பதாக அமைந்தது. இப்பிரச்னைக்கு தீா்வுகாண மாவட்ட நிா்வாகம் ஆலோசனை நடத்தியது.

அதன்படி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம் செய்பவா்கள் கோசாலைகளுக்கு போா்வைகளை அன்பளிப்பாக அளிக்க வேண்டுமென்று கூடுதலாக ஒரு விதியைச் சோ்க்க ஆட்சியா் முடிவெடுத்தாா். இது தொடா்பாக அதிகாரப்பூா்வமான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT