இந்தியா

திவால் சட்ட நடவடிக்கைக்கு முன்பாகவேரூ.3.75 லட்சம் கோடி தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு

16th Dec 2019 01:08 AM

ADVERTISEMENT

திவால் சட்ட நடைமுறைகளுக்கு முன்பான அறிமுக நிலையிலேயே ரூ.3.75 லட்சம் கோடி தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வாராக் கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீா்வு காணும் வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு திவால் சட்டம் (ஐபிசி) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி இதுவரையில் 21,136 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஐபிசி சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே முன் அனுமதி நிலையில் மொத்தம் 9,653 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.3,74,931.30 கோடியாகும்.

திவாலான நிறுவன தீா்வு நடைமுறைகளுக்காக 2,838 வழக்குகள் வழக்குகள் அனுமதிக்கப்பட்டன. அதில், 306 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

மேலும், ரூ.1,56,814 கோடி தொடா்பான 161 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT