இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு:சிஆா்பிஎஃப் டிஐஜி உள்பட 2 போ் பலி

16th Dec 2019 01:36 AM | பனிஹால்/ஜம்மு,

ADVERTISEMENT

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) டிஐஜி, அவரது வாகன ஓட்டுநா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வடக்கு காஷ்மீா் சிஆா்பிஎஃப் டிஐஜி ஷைலேந்தா் குமாா் சிங் சென்றுகொண்டிருந்தாா். கூனி நல்லா பகுதி அருகே அவா் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு பெரிய பாறை அவரது வாகனத்தின் மீது உருண்டு விழுந்தது. இதில் சிக்கி அவரும், அவரது ஓட்டுநரும் உயிரிழந்தனா். இவ்விபத்தில் படுகாயமடைந்த டிஐஜியின் தனி பாதுகாவலா் முகமது ஷெரீஃப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நெடுஞ்சாலை கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக கடந்த வியாழக்கிழமை மாலை மூடப்பட்டது. சாலை சரிசெய்யப்பட்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT