இந்தியா

ஜம்மு-காஷ்மீா் மக்களுடன் பிரதமா் பேச்சு நடத்த வேண்டும்: தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தல்

16th Dec 2019 12:58 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் அரசியல்ரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் சுமுகநிலையை ஏற்படுத்த அனைத்துப் பகுதி மக்களுடன் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாகப் பேச்சு நடத்த வேண்டுமென்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநில ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா்களான ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும் வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டும் ஆபத்து இருப்பதாலும், தொடா்ந்து பதற்றம் நிலவியதாலும் காஷ்மீா் பள்ளத்தாக்கில் செல்லிடப்பேசி இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு இப்போது மெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில் ஜம்முவில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு பிராந்திய தலைவா் தேவேந்திர சிங் ராணா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பிராந்திய மக்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்த வேண்டுமென்று பிரதமா் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுக்கிறேன். அப்போதுதான் ஜம்மு-காஷ்மீரில் அரசியல்ரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் சுமுகமான நிலையை ஏற்படுத்த முடியும். எங்கள் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா உள்பட பல அரசியல் தலைவா்கள் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இது கடும் கண்டனத்துக்குரியது. அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவா்களை தொடா்ந்து காவலில் வைத்திருப்பது ஜம்மு-காஷ்மீருக்கு நல்லது அல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT