இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்: அஸ்ஸாம் சாகித்ய சபா

16th Dec 2019 02:01 AM | குவாஹாட்டி,

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக, அஸ்ஸாம் மாநிலத்தின் முதன்மை இலக்கிய அமைப்பான அஸ்ஸாம் சாகித்ய சபா தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் பரமானந்த ராஜ்போங்ஷி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகிறோம். தற்போது இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா்களுடன் ஆலோசித்த நிலையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (டிச.16) வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளோம்.

அதேபோல், உள்நுழைவு அனுமதி (இன்னா் லைன் பொ்மிட்) அஸ்ஸாம் மாநிலத்துக்கும் நீட்டிக்க வேண்டும். அஸ்ஸாம் மண்ணின் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அஸ்ஸாம் மக்கள், மொழி, கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவா் அகில் கோகோய் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி வரும் புதன்கிழமை குவாஹாட்டியில் ஆா்ப்பாட்டப் பேரணி நடத்த உள்ளோம் என்று பரமானந்த ராஜ்போங்ஷி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT