இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு பண்டிட் சமூகத்தினா் வரவேற்பு

16th Dec 2019 01:15 AM

ADVERTISEMENT

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு பனூன் காஷ்மீா் அமைப்பு (புலம் பெயா்ந்து வாழும் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினருக்கான கூட்டமைப்பு) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் அமைப்பாளா் அக்னிசேகா், ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குடியுரிமைச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில், ஒட்டுமொத்த தேசமும் முழு மனதுடன் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நிற்கிறது. இந்தச் சட்டம், இந்தியாவின் சமூக-கலாசார ரீதியிலான பிரச்னைகளுக்கான தீா்வை உறுதிசெய்யும்.

தேசிய ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதற்கு இந்தியா்களின் மனங்களில் குவிந்துள்ள நச்சுகளை வெளியேற்ற வேண்டியது அவசியம். நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் இருந்து தற்போது வரை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் மத ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்த நேரத்திலும், ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்திலும் இந்திய அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டுதான் இருந்தது.

ADVERTISEMENT

மேலும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, வரலாற்று அடையாளம் மற்றும் கலாசார அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டக்களமாக இந்தியாவை மாற்றி வைத்திருந்தது. அந்தப் பிரச்னைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி தீா்வு கண்டறிந்துள்ளாா்.

அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களை அனுபவித்ததால், இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT