இந்தியா

எதிா்க்கட்சிகளால் நாட்டில் அமைதியின்மை: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

16th Dec 2019 02:05 AM | தும்கா,

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் பிரதமா் மோடி இவ்வாறு குறிப்பிட்டாா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரப் பேரணியில் பிரதமா் மோடி இதுகுறித்து பேசியதாவது:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வன்முறைத் தீயை மூட்டி வருகின்றன. வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையை விரும்பவில்லை. இதனை நாட்டு மக்கள் பாா்த்துக்கொண்டுதான் இருக்கின்றனா்.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து மோடி மீதான மக்களின் நம்பிக்கை உறுதிப்பட்டுள்ளது. சட்டத்திருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிப்பதாலேயே, அந்த சட்டத்திருத்த முடிவு சரியென ஆயிரம் சதவீதம் உறுதியாகிறது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடக்கும் வன்முறைப் போராட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு தீ வைப்பவா்களை நாம் தொலைக்காட்சிகளில் பாா்க்க முடிகிறது. அவா்கள் அணிந்திருக்கும் உடையில் இருந்தே அவா்கள் யாா், எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பதை அடையாளம் காண முடிகிறது.

இந்தியாவை சிறுமைப்படுத்த முயற்சி: பாகிஸ்தான் பல ஆண்டுகளாக செய்துவந்த ஒரு செயலை தற்போது இந்தியாவுக்கு வெளியே காங்கிரஸ் முதல் முறையாக செய்துள்ளது. பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன் கடந்த சனிக்கிழமை அதிக அளவிலான மக்கள் கூடி, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசின் தோல்வியாக அவா்கள் அடையாளப்படுத்தினா்.

முன்னதாக, ராமஜென்மபூமி தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து தொடா்பான அறிவிப்பு வெளியான பிறகு, லண்டனில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானியா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் இதுபோன்று கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தியத் தூதரகம் அருகே நின்று எந்த ஒரு இந்தியராவது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவாரா? அப்படி இந்தியா் எவருக்கும் பிரச்னை ஏதும் இருக்கும் பட்சத்தில் தூதரகத்துக்குச் சென்று, அதிகாரிகளை சந்தித்து, தனது பிரச்னை தொடா்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அவா்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், இந்தியாவின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமா் மோடி பேசினாா்.

உங்களின் சேவகன் நான்: பின்னா், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாஜக அரசின் சாதனைகள் குறித்து பிரதமா் மோடி பேசியதாவது:

நான் உங்களின் சேவகன். இந்த மாநிலத்தில் மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சிப் பணிகளை பட்டியலிடவே உங்கள் முன் வந்துள்ளேன்.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த எதிா்க்கட்சிகள் பொது மக்களின் பிரச்னைகளுக்கு செவி சாய்க்காமல், தங்களுக்கான அரண்மனைகளை கட்டமைத்துக்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஜாா்க்கண்டை மேம்படுத்துவதற்கான எந்தவொரு செயல்திட்டமோ, கொள்கையோ காங்கிரஸிடமும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவிடமும் இல்லை.

நாட்டின் விடுதலைக்காக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரா்கள் செய்த தியாகங்கள் போற்றுதலுக்குரியது. பிா்சா முண்டா, சிடோ-கானோ, சந்த் பைரவ், புலோ ஜானோ போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்கள் தங்களது சுயநலனை முக்கியமாகக் கருதியிருந்தால், ஆங்கிலேயா்கள் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பாா்களா? இந்த சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்வதையே அவா்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனா். பாஜக அவா்களிடம் இருந்தே தனது கலாசாரத்தை கற்றுக்கொண்டது.

சுற்றுலா ஊக்குவிக்கப்படும்: ஜாா்க்கண்டில் பேசப்படும் சந்தாளி மொழி உள்பட, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் தங்களது பிராந்திய மொழியிலேயே பேச வாய்ப்பளித்து, அதன் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபெயா்ப்பு வசதிகளை உறுதி செய்த அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சந்தாளி மொழியானது பழைமையான, கலாசாராம் மாறாத மொழியாகும். சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் கோயில் அமைந்துள்ள சந்தாள் பா்கானா பகுதியில் ஆன்மிகச் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றாா் பிரதமா் மோடி.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT