இந்தியா

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம்

16th Dec 2019 01:17 AM

ADVERTISEMENT

பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்புக்கு பிறகு, இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சீனா தெரிவித்தது.

இந்தியாவுக்கான சீனத் தூதா் சன் வீடோங், தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இரு நாடுகளுக்கு இடையே வா்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்தனா்.

இதுதொடா்பாக இருநாடுகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பில் (ஆா்சிஇபி) இந்தியாவின் முடிவுக்கு சீனா மரியாதை அளிக்கிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

ADVERTISEMENT

இரு நாட்டு தலைவா்களும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டதால் பாதுகாப்பு ஒத்துழைப்பில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. சா்வதேச எல்லையில் சுமாா் 3,500 கி.மீ. தொலைவுக்கு கடந்த சில மாதங்களில் இரு நாட்டு ராணுவ வீரா்களிடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ, இந்தியாவுக்கு இந்த மாதம் வருகை தரவுள்ளாா். அப்போது, மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவா்களும் சந்தித்தபோது எடுத்த முக்கிய முடிவுகளை அமல்படுத்தும் பணிகளை ஆய்வு செய்யவுள்ளாா்.

இரு நாடுகளும் மிகச் சிறந்த நாடுகளாக திகழ வேண்டும் என்று கனவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா, புதிய இந்தியாவை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும். ஒருதலைபட்சமான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கக் கூடாது. அது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்றாா் அவா்.

இந்தியாவும், சீனாவும் எல்லைப் பிரச்னையைத் தீா்க்க 20 சுற்றுப் பேச்சுவாா்த்தையை நடத்திவிட்டது. இந்தியாவின் ஒரு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்தைச் சோ்ந்த பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இதனால், எல்லைப் பிரச்னைக்கு இறுதித் தீா்வு எட்ட முடியவில்லை.

உலக அளவில் மாபெரும் தடையற்ற வா்த்தக பகுதியை உருவாக்க வழிவகுக்கும் பிராந்திய விரிவான பொருளதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியாவை இணையச் செய்வதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஜப்பான் தெரிவித்திருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT