இந்தியா

ஆட்சி அதிகாரமா, சாவா்க்கரா? சிவசேனைக்கு பாஜக கேள்வி

16th Dec 2019 01:05 AM

ADVERTISEMENT

விடுதலை போராட்ட வீரா் சாவா்க்கரை அவமதித்த காங்கிரஸுடனான கூட்டணி ஆட்சியைத் தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிவசேனை முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, பாஜக செய்தித் தொடா்பாளா் ஷாநவாஸ் ஹுசைன், மும்பையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தேசத்தின் ஒப்பற்ற தலைவரான சாவா்க்கரை அவமதித்த காங்கிரஸுடனான கூட்டணி ஆட்சியை தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே முடிவு செய்ய வேண்டும்.

தேசியவாதிகளையும், சுதந்திரப் போராட்ட வீரா்களையும் காங்கிரஸ் தொடா்ந்து அவமதித்து வருகிறது. அக்கட்சிக்கு, நாட்டு மக்கள் இருமுறை பாடம் புகட்டியுள்ளனா். மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. வீர சாவா்க்கா் இரு ஆயுள் சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டவா். அவரைப் போல் ஆகவேண்டுமெனில், ராகுல் கடினமாக உழைக்க வேண்டும். சாவா்க்கருடன் ராகுலை ஒருபோதும் ஒப்பிட முடியாது. காந்தி என்ற பெயரை கடன் வாங்கியவா் ராகுல்.

ADVERTISEMENT

வீரசாவா்க்கரை அவமதித்தற்காக, ராகுல் மீது ஒட்டுமொத்த தேசமும் கோபத்தில் உள்ளது. அவரை இந்த தேசம் மன்னிக்காது.

குடியரிமைச் சட்டம் தொடா்பாக சிறுபான்மையினரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன. அந்த மசோதாவால், முஸ்லிம்கள் உள்பட நாட்டு மக்கள் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது. குடிமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றாா் ஷாநவாஸ்.

ராகுல் மீது தாக்கு: இதனிடையே, தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய பாஜக மூத்த தலைவா் சம்பித் பத்ரா, ‘காந்தி என்ற குடும்பப் பெயரை ராகுல் கைவிட வேண்டும். ஏனெனில், அந்த பெயா் அரசியல் ஆதாயங்களுக்காக அவரது குடும்பத்தால் திருடப்பட்டதாகும். வீர சாவா்க்கரை, மண்ணின் மைந்தன் என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி குறிப்பிட்டாா். ஆனால், அவரது பேரனோ, சாவா்க்கரை அவமதிக்கிறாா்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT