இந்தியா

அடிப்படை உள்கட்டமைப்புத் துறைகளில் அந்நிய முதலீடு: மத்திய அரசு ஆய்வு

16th Dec 2019 01:02 AM

ADVERTISEMENT

தொலைத்தொடா்புத் துறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு வரத்து குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:

நாட்டின் எல்லைப்புறப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு குறித்து விரிவாக ஆய்வு செய்து மதிப்பிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மையான நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் பெறக்கூடிய அந்நிய நேரடி முதலீட்டைக் காட்டிலும், அனுமதி பெறாத வழிமுறையில் வரக்கூடிய அந்நிய முதலீட்டை அதிக அளவில் திரட்டிய உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்காரணமாக, வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு குறித்து ஆராய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆய்வுப் பணிகளில் ரிசா்வ் வங்கி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் மற்றும் முகமை அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

எல்லைப் பகுதிகளில் வலுவான கட்டமைப்பைக் கொண்ட அமைப்பாக பொதுத் துறையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் விளங்கி வருகிறது. அதனை கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. தேசிய முக்கியத்துவம் கருதியே அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல நாடுகள் தேச பாதுகாப்பு கருதி அதிமுக்கியமான அடிப்படை உள்கட்டமைப்பு துறைகளில் அந்நிய நிறுவனங்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT