இந்தியா

அசாமில் தவிக்கும் பயணிகளுக்கு உதவ குவாஹாட்டியிலிருந்து சிறப்பு ரயில்

14th Dec 2019 04:26 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் அசாமில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாமில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளை அடைய, குவாஹாட்டியில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுபோன்ற ஒரு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை திமாபூருக்கு இயக்கப்பட்டது.

ADVERTISEMENT

மற்றொன்று சனிக்கிழமையன்று அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தின் பிரதான ரயில் சந்திப்பான ஃபர்கேட்டிங்கிற்கும், மற்றொரு திப்ருகாருக்கு இயக்கப்பட்டது.

குவாஹாட்டியில் இருந்து திமாபூர் செல்லும் சிறப்பு பயணிகள் ரயில் இன்று இரவு 2:30 மணிக்கு குவாஹாட்டியில் இருந்து இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு ரயில்களைப் பற்றி பயணிகளுக்கு தெரிவிக்க ரயில்வே பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும், மேலும் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளும் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறார்கள், மூத்த அதிகாரிகள் மேற்பார்வையிட கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டுள்ளனர்.
 

Tags : special train
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT