இந்தியா

ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

14th Dec 2019 06:51 PM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தில் ஃபரூக் அப்துல்லா உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதன்மூலம், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்படும் முதல் முதல்வர் ஃபரூக் அப்துல்லாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் இன்று (சனிக்கிழமை) மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

"ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்துறைக்கான ஆலோசனைக் குழு, ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் விவகாரம் குறித்து மறுஆய்வு செய்தது. இதையடுத்து, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரது தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்கக்கோரி அந்தக் குழு பரிந்துரைத்தது" என்றனர். 

இதன்மூலம், ஃபரூக் அப்துல்லா மேலும் 3 மாதங்களுக்கு அவரது இல்லத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT