இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் பொருளாதாரம் செழிக்கும்: நித்தியானந்தா

14th Dec 2019 05:40 AM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்திய நாட்டின் பொருளாதாரம் செழிக்கும் என கூறி புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுளார் நித்தியானந்தா. மேலும் ராமர் கோயில் கட்ட நிதி அளிப்பது இந்திய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கு சமம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தீவிரமாக  தேடிவருகின்றனர் மேலும் மத்திய அரசு சா்ச்சை சாமியாா் நித்தியானந்தாவின் பாஸ்போா்ட்டை ரத்து  செய்துள்ளது. மேலும் நித்தியானந்தா பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு பல்வேறு நாடுகளின் அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT