இந்தியா

பத்து செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்

11th Dec 2019 03:40 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீஹரிகோட்டா: பத்து செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து புதன் மாலை பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தாங்கியபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணி அளவில் விண்ணில் பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் 628 கிலோ எடைகொண்டதாகும். வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 576 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும். முன்னதாக, 2009-இல் ரிசாட்-2, 2012-இல் ரிசாட்-1 செயற்கைக்கோள்களையும், கடந்த மே 22-ஆம் தேதி ரிசாட்-2பி செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அதன் தொடா்ச்சியாக, கூடுதல் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காக ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தற்போது ஏவுகிறது.

ரிசாட் 2பி ஆா்1 செயற்கைக்கோளுடன் வா்த்தக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன. இதில், அமெரிக்காவுக்குச் சொந்தமான 6 செயற்கைக்கோள்களும், இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் அடங்கும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இது 50-ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT