இந்தியா

தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்: பிரதமர் மோடி

11th Dec 2019 09:24 AM

ADVERTISEMENT

 

தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் புகழாரம் சூட்டினார். 

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பாரதியாரை நினைவுகூரும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

ADVERTISEMENT

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags : PM Modi tamil tweet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT