இந்தியா

கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை: நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கை தாக்கல்

11th Dec 2019 02:05 PM

ADVERTISEMENT

 

கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று குஜராத் சட்டப்பேரவையில் நானாவதி-மேத்தா அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத்தின் கோத்ரா பகுதியில் 2002-ஆம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு  குஜராத் அரசிடம் விசாரணை அறிக்கையை நானாவதி கமிஷன் தாக்கல் செய்தது. 

இந்நிலையில், 1500-க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட நானாவதி-மேத்தா கமிஷனின் அறிக்கை 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டு குஜராத் சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

ADVERTISEMENT

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது நடந்த மத கலவரத்துக்கும் குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்படவில்லை. மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்ததாகவோ, எந்த அமைச்சருக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

அசம்பாவிதங்களை கட்டுக்குள் வைக்க போலீஸார் தவறிவிட்டனர், போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கலவரம் தீவிரமடைந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : Nanavati-Mehta Commission
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT