இந்தியா

காதலியுடன் சேர மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்

11th Dec 2019 10:44 AM

ADVERTISEMENT

 

கேரளாவில் காதலியுடன் சேர தடையாக இருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(40) தனது மனைவி வித்யாவை காணவில்லை என்று உதயம்பூர் போலீசில் கடந்த செப்டம்பர்20ம் தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்துவந்த நிலையில், வித்யாவின் உடல் திருநெல்வேலி பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

பிரேம் குமாரும், அவரது காதலி சுனிதா பேபியும் இணைந்து செப்டம்பர் 21 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வில்லாவில் வைத்து வித்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதன்பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திருநெல்வேலியில் உடலை அடக்கம் செய்துள்ளனர். 

ADVERTISEMENT

​​முதலில், கொச்சி நகர காவல் ஆணையர் இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரேம்குமார் இருப்பதாக சில தகவல்களை சேகரித்தார். தொடர்ந்து,  டி.சி.பி பூங்குழலியின் கீழ் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  மேலும், திருவனந்தபுரத்தின் குற்றப்படை மற்றும் சைபர் செல் உதவியுடன் விசாரணை நடைபெற்றது. இறுதியில் பிரேம்குமாரே, காதலியுடன் இணைந்து மனைவியை கொன்றுவிட்டு போலீசில் நாடகமாடியது தெரிய வந்துள்ளது. 

பிரேம்குமார் காதலியுடன் இணைய மனைவி வித்யா தடையாக இருந்த காரணத்தால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக சுனிதா பணிபுரிந்து வருகிறார. அவரும் கணவருடன் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பிரேம் மற்றும் சுனிதா இருவரும் சமீபத்தில் சந்தித்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என வித்யாவை கொலை செய்துள்ளனர்.

தற்போது பிரேம்குமார் மற்றும் சுனிதா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT