இந்தியா

மகாகவி பாரதியாரை போற்றுவோம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

11th Dec 2019 12:06 PM

ADVERTISEMENT

மகாகவி பாரதியாரை போற்றுவோம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அவருக்கு பல்வேறு தலைவர்கள் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாரதியாரை புகழ்ந்து டிவிட்டரில் தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்... மகாகவி பாரதியாரை போற்றுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT