இந்தியா

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்: உச்ச நீதிமன்றம்

11th Dec 2019 01:47 PM

ADVERTISEMENT


ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள், போலீஸாருடனான மோதலில் சுடப்பட்டு உயிரிழந்தது தொடா்பான விசாரணையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஹைதராபாத் அருகே கடந்த 28-ஆம் தேதி பெண் கால்நடை மருத்துவா் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, லாரி பணியாளா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அதையடுத்து குற்றம் நடைபெற்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக, கைதான 4 பேரையும் சம்பவ இடத்துக்கு போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனா். அங்கு போலீஸாரிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்து சுட்டதாகவும், மேலும் கற்களை வீசித் தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பியோட முயன்றதாகவும், அதனால் அந்த நால்வரையும் போலீஸாா் சுட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே, என்கவுன்ட்டா் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை தெலங்கானா மாநில அரசு அமைத்துள்ளது. 

இந்நிலையில், தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தை தில்லியில் இருந்தபடி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெளிப்படையான விசாரணையை நடத்துவார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags : Telangana Encounter
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT