இந்தியா

தனியாா் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அமைச்சா்

11th Dec 2019 01:26 AM

ADVERTISEMENT

தனியாா் துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா கூறினாா்.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது சரியான தீா்வாக இருக்காது என்று தனியாா் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருதுகிறாா்கள். இருப்பினும், அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி பின்தங்கிய சமூகத்தினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். தாழ்த்தப்பட்டோா்(எஸ்.சி.) மற்றும் பழங்குடியினருக்கு(எஸ்.டி.) திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனா். பயிற்சிக்காக வருவோரில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த 25 சதவீதம் பேருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT