இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல: அமித்ஷா பேச்சு

11th Dec 2019 12:55 PM

ADVERTISEMENT


புதுதில்லி: தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை (டிச.11) அறிமுகம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். 

அப்போது, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்போதும் இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள். பயப்படத்தேவையில்லை.

இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அண்டை நாடுகளின் சிறுபான்மை சமூகங்களுக்கானது. இதற்கும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். தயவு செய்து தவறான தகவல்களை கேட்டுக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமித்ஷா, சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை தயவு செய்து எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். என்றவர், பயத்தில் வாழ வேண்டாம். அச்சமின்றி வாழுங்கள் என்று கூறினார். 

ADVERTISEMENT

மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாத நிலையிலும் மற்ற கட்சிகள் ஆதரவுடன் இன்றே வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT