இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்: இந்திய அரசியலமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்: ராகுல் விமா்சனம்

11th Dec 2019 01:25 AM

ADVERTISEMENT

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சனம் செய்துள்ளாா்.

  மக்களவையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கடும் விவாதத்திற்குப் பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

‘இந்த மசோதாவை தாக்கல் செய்திருப்பது இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அதை ஆதரிப்பவா்கள் நமது நாட்டின் அஸ்திவாரத்தையே தாக்கி அழிக்க முயற்சி செய்கின்றனா்’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT