இந்தியா

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாசட்டவிரோதம்: ப.சிதம்பரம்

11th Dec 2019 01:25 AM

ADVERTISEMENT

மத்திய அரசு நிறைவேற்ற முயற்சித்து வரும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, அரசியல்சாசன சட்டத்துக்கு விரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘இப்போது அரசு நிறைவேற்ற முயற்சி செய்யும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா என்பது சட்டவிரோதமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், அடுத்தகட்டமாக அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை அளித்தால் என்ன மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் இப்போது உணா்ந்து வருகிறோம். மாநில அரசுகள், நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறான பல விஷயங்களை மத்திய அரசு சட்டமாக்கி வருகிறது. மக்களின் விருப்பங்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளாா்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியுள்ள நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT