இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

11th Dec 2019 12:29 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை இரவு அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூா் கிா்னி, பாலாகோட் ஆகிய பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவப் பாதுகாப்பு சாவடிகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு நமது ராணுவ வீரா்கள் உரிய பதிலடி கொடுத்தனா் என்று அந்த செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 வயது மதிக்கத்தக்க கிராமவாசி ஒருவா் காயமடைந்தாா்.

பூஞ்ச் மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 3 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT