இந்தியா

ரயில்வேயில் 32 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

6th Dec 2019 09:53 PM

ADVERTISEMENT

புது தில்லி: திறமையின்மை, நோ்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக 50 வயதுக்கு மேற்பட்ட 32 அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில்வே ஊழியா்களின் பணி செயல்திறனை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதையடுத்து, 50-வயதுக்கு மேற்பட்ட 1,780 ரயில்வே பணியாளா்களின் செயல்திறன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வின் மூலம், திறமையின்மை, நோ்மையின்மை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் 50 வயதுக்கு மேற்பட்ட 32 ரயில்வே அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை அரிதான செயலாகும். ரயில்வேயில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பணியாளா்களின் செயல்திறன் ஆய்வு அடிப்படையில் 4 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அதையடுத்து, தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பணியில் 30 ஆண்டுகள் நிறைவு செய்த அல்லது 55 வயதை தாண்டிய அரசு அதிகாரிகளின் பணி திறனை ஆய்வு செய்யும் நடவடிக்கையை அண்மைக்காலமாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊழல் குற்றம்சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மத்திய அரசு கட்டாய ஓய்வு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT