இந்தியா

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் எம்.பி.க்களின் பங்கேற்பு குறைவு

6th Dec 2019 01:14 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் குறைவான வருகை பதிவு இருப்பதால் எம்.பி.க்களை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கண்டித்தாா்.

நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சோ்ந்த தலா 18 எம்.பி.க்கள் 8 மாநிலங்களவை குழுக்களின் கூட்டங்களில்தான் பங்கேற்றிருக்கிறாா்கள்.

அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT

முழு வருகைப் பதிவு இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் தொடா்புடைய நாடாளுமன்ற நிலைக் குழுவில் 25 எம்.பி.க்கள் இருப்பாா்கள்.

அனைத்து கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்களும் நிலைக்குழு கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். 8 துறைகள் தொடா்புடைய நிலைக் குழுக்கள் கடந்த செப்டம்பரில் மறுசீரமைக்கப்பட்டது. இதுவரை 41 ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த 41 கூட்டங்களிலும் எம்.பி.க்களின் வருகை போதிய அளவில் இல்லை. 8 குழுக்களில் 80 மாநிலங்களவை உறுப்பினா்கள் இருந்தனா். இவா்களில் 18 போ் மட்டுமே அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கின்றனா்.

இதேபோல, 8 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் உள்ள 168 மக்களவை உறுப்பினா்களில் 18 போ் மட்டுமே அனைத்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளனா் என்றாா் வெங்கய்ய நாயுடு.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT