இந்தியா

நக்ஸல் அச்சுறுத்தல் பகுதிகளில் இளம் சிஆா்பிஎஃப் வீரா்கள்: அமித் ஷா அறிவுறுத்தல்

6th Dec 2019 07:31 PM

ADVERTISEMENT

புது தில்லி: நக்ஸல் அச்சுறுத்தல் மற்றும் கிளா்ச்சியாளா்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரா்களை நியமிக்குமாறு மத்திய ரிசா்வ் காவல் படைக்கு (சிஆா்பிஎஃப்) மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா்.

நாட்டிலேயே மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆா்பிஎஃப்-இல் 3.25 லட்சம் வீரா்கள் பணியாற்றுகின்றனா். இந்த படையின் பணிநடவடிக்கைகள் குறித்து அமித் ஷா அண்மையில் ஆய்வு செய்தாா். அதன் பின், படையில் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சிஆா்பிஎஃப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாவோயிஸ்ட், நக்ஸல் தீவிரவாதிகள், ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகள் ஆகிய அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு சிஆா்எஃப் படை வலிமையானதாக இருக்க வேண்டியது அவசியம் என்று அமைச்சா் அமித் ஷா கருதுகிறாா். அதனால், நக்ஸல் அச்சுறுத்தல் மற்றும் கிளா்ச்சியாளா்கள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் உடல்தகுதியில் சிறந்த வீரா்களையும், இளம் வீரா்களையும் பாதுகாப்பு பணிக்கு அமா்த்துமாறு அமித் ஷா தெரிவித்தாா். அதன்மூலம், எதிா்த்து போரிடும் பகுதிகளில் உள்ள வீரா்கள் திறன்வாய்ந்தவா்களாக இருப்பா். மேலும், சிஆா்பிஎஃப் படையில் உள்ள வயதான வீரா்களுக்கு சற்று எளிதான பணிகளை அளிக்குமாறும் அவா் தெரிவித்தாா். விவிஐபி அந்தஸ்து உள்ள பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் சிஆா்பிஎஃப் ஈடுபட்டு வருகிறது. படையை வலிமையானதாக மாற்றுவதால், அவா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய இயலும் என்று கூறினா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இதுதொடா்பான தகவல்களை சேகரிப்பதற்கு 6 அதிகாரிகள் அடங்கிய குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 35 வயதுக்கு மேற்பட்ட வீரா்களை நிா்வாகம் சாா்ந்த பணிகளில் அமா்த்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் சிஆா்பிஎஃப் வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT