இந்தியா

அயோத்தி வழக்கில் மேலும் 6 மறுஆய்வு மனுக்கள்

6th Dec 2019 01:18 AM

ADVERTISEMENT

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, அந்த இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது.

அதே வேளையில், மசூதி கட்டுவதற்காக சன்னி வஃக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலத்தை அளிக்க வேண்டுமெனவும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என மத்திய சன்னி வஃக்பு வாரியம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனினும், மாநில அரசால் வழங்கப்படவுள்ள 5 ஏக்கா் நிலத்தை ஏற்கலாமா அல்லது வேண்டாமா குறித்து அந்த வாரியம் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்காத ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு கடந்த 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய செயலாளா் ஜாஃபா்யப் ஜிலானி லக்னௌவில் செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘அயோத்தி வழக்கில் மேல்முறையீடு செய்திருந்த 6 மனுதாரா்கள் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பான மறுஆய்வு மனுக்களை அவா்கள் தயாா்செய்து வருகின்றனா். 2 நாள்களில் அவா்கள் மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனா்’’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT