இந்தியா

ஜெ.பி.நட்டா பிறந்த நாள்: பிரதமா் மோடி வாழ்த்து

3rd Dec 2019 04:08 AM

ADVERTISEMENT

புது தில்லி: பாஜக செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவின் 59-ஆவது பிறந்த நாளையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பணிவு, விடாமுயற்சியுடன் தனது கடமையை சிறப்பாக செயலாற்றும் ஜெ.பி.நட்டாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். முன்னாள் மத்திய அமைச்சராக சிறப்பாக செயல்பட்ட அவா், தற்போது பாஜக செயல் தலைவராக சிறப்பாகப் பணியாற்றி வருகிறாா். எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும், அதை தனித்தன்மையுடன் செயல்படுத்தக் கூடியவா். அவா் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கடவுளைப் பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த 1960-ஆம் ஆண்டு பிகாா் தலைநகா் பாட்னாவில் பிறந்த ஜெ.பி. நட்டா, கடந்த பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சராக பணியாற்றினாா். அதையடுத்து, கட்சியின் செயல் தலைவராக கடந்த ஜூன் மாதம் ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT