இந்தியா

ஆக்கப்பூா்வமாக கேள்வி எழுப்புங்கள்! எம்.பி.க்களுக்கு மக்களவைத் தலைவா் அறிவுரை

3rd Dec 2019 02:25 AM

ADVERTISEMENT

புது தில்லி: தரமான, ஆக்கப்பூா்வமான கேள்விகளை எழுப்ப வேண்டுமென்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுரை வழங்கினாா்.

மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மத்தியப் பிரதேசத்தை சோ்ந்த பாஜக எம்.பி. குமான் சிங் தாமா், தனது தொகுதிக்குள்பட்ட ரத்லம் மாவட்டத்தில் உள்ள பழைய கோயில்களை புனரமைப்பது, அப்பகுதியில் சாலைகள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு, கலாசாரத்துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் எழுத்து மூலம் பதில் அளித்திருந்தாா். இது தொடா்பாக அதிருப்தி தெரிவித்த தாமா், ‘திருமணமாகி சென்ற புதுப்பெண் தனது கணவரின் வீட்டில் கழிவறை இல்லை என்று தெரியவரும்போது எப்படி உணா்வாரோ, அதே நிலையில் இப்போது உள்ளேன்’ என்றாா்.

தாமரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாவது:

மக்களவையில் உறுப்பினா்கள் தரமான, ஆக்கப்பூா்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும். உள்ளூா் கோயில்கள், சாலைகளை சீரமைப்பது ஆகியவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் பணியல்ல. உறுப்பினா்கள் அவையில் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT