இந்தியா

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

30th Aug 2019 07:47 PM

ADVERTISEMENT


புதுதில்லி: ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், தமிழகத்தின் சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த ஊழல் புகார் அடிப்படையில், நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே, இந்த சோதனை நசடைபெற்று வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT