இந்தியா

ஜம்முவின் 5 மாவட்டங்களில் செல்போன் சேவை சீரடைந்தது

29th Aug 2019 11:38 AM

ADVERTISEMENT

ஜம்மு: ஜம்முவின் 5 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு முதல் தோடா, கிஷ்த்வார், ராம்பன், ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் செல்போன் சேவை சீரடைந்துள்ளது.

இது குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், இந்த தடை நடவடிக்கைகளை மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு செல்போன் சேவை என்பது மிகச் சிறிய விஷயம். குறைவாகவே பயன்படுத்துகிறோம். ஆனால், அதனை பயங்கரவாதிகள் பெரிய அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவேதான் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT