இந்தியா

மம்தா பானர்ஜியின் காலைத் தொட்டுக் கும்பிட்ட ஐபிஎஸ் அதிகாரி! சர்ச்சையைக் கிளப்பும் விடியோ!!

28th Aug 2019 03:56 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் சீருடையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் காலைத் தொட்டுக் கும்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிராமங்களுக்குச் சென்று அங்கு வாழும் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தும், மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டும் வருகிறார்.

அந்த வகையில், கிழக்கு மிட்னாபூரின் திகா என்ற பகுதியில் நிர்வாகிகள் மட்டத்திலான கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த விடியோ எடுக்கப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. அந்த விடியோவில் மம்தா பானர்ஜி  கடற்கரை போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து கேக்கினை அதிகாரிகளுக்கு ஊட்டி விடுகிறார்.

 

ADVERTISEMENT

அப்போது சீருடை அணிந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் மிஸ்ரா மம்தா பானர்ஜியின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு கேக்கினை ஊட்டிக் கொள்கிறார்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT