இந்தியா

அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் சுகாதாரக் காப்பீடு வழங்க வேண்டும்: எதிர்கட்சித் தலைவர்!

27th Aug 2019 03:13 PM | Muthumari

ADVERTISEMENT

 

மறைந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் சிகிச்சைக்காக பல கோடி ரூபாய் செலவான நிலையில், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் சுகாதாரக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் திகம்பர் காமத் மாநில அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.  

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு அளிப்பது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவாவில் நடைபெற்றது. இதில் பேசிய கோவா எதிர்கட்சித் தலைவர் திகம்பர் காமத், 'சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்க வேண்டும். இதன்மூலம் மாநில அரசின் நிதிச்சுமையை நாம் குறைக்க முடியும். இதற்காக எம்.எல்.ஏக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT

கோவா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி காலமானார். அவர் கோவா, மும்பை, டெல்லி, நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றார். பாரிக்கரின் இந்த சிகிச்சைக்காக மாநில அரசு, 5.72 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோன்று மறைந்த கோவாவின் துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசாவின் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 

தற்போது, ​​எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது மற்றும் குடும்பத்தினரது மருத்துவச் செலவுகளுக்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான தொகையை பெற்றுக்கொள்வர். பெரும்பாலான மாநிலங்களில் இம்முறை தான் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவா அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதாரக் காப்பீடு வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. 

கோவா மாநில மக்களுக்கு ரூ. 2 லட்சம் அளவிலான சுகாதாரக் காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT