இந்தியா

பசு அதிகமாக பால் கொடுக்க அசாம் பாஜக எம்.எல்.ஏவின் 'பலே' ஐடியா 

27th Aug 2019 08:06 PM

ADVERTISEMENT

 

சில்சார்: பசு அதிகமாக பால் கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று அசாம் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கூறியுள்ள கருத்து விவாதத்தை எழுப்பியுள்ளது. 

அசாம் மாநிலம் சில்சார் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. திலிப் குமார் பால். இவர் சமீபத்தில் தொகுதியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:

தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் வெளிநாட்டு பசு இனங்களின் பால் போலல்லாமல்  வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்திய மாடுகளின் பாலின் தரம் மற்றும் சுவை கூடுதலாக இருக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ், வெண்ணெய் போன்ற தயாரிப்புகளும் வெளிநாட்டு இனங்களை விட மிகவும் சிறந்தவை

ADVERTISEMENT

முக்கியமாக இசை மற்றும் நடனம் ஆகியவை கால்நடைகளிடம் கூட நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கடவுள் கிருஷ்ணர் ஆடிக்கொண்டு புல்லாங்குழல் ஊதியதை காதால்  கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது,”

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது கூற்றின் நம்பகத்தன்மை குறித்து கேட்டபோது, குஜராத்தை தளமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு செய்த சில ஆராய்ச்சிகளின் மூலம் புல்லாங்குழல் இசைக்கு மற்றும் பால் விளைச்சல் அதிகரிப்புக்கு இடையேயான தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT