இந்தியா

நல்ல வேளை.. இம்ரான் கான் எனக்கு டீச்சரா வரல..! - ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ட்வீட்

27th Aug 2019 06:18 PM | Muthumari

ADVERTISEMENT

 

ஜெர்மனியும், ஜப்பானும் அண்டை நாடுகள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா, நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை ட்விட்டர் வாயிலாக பதிவிட்டு வருகிறார். அத்துடன், சமூக பிரச்னைகள், சுவாரசியமான சில விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது நகைச்சுவையான சில பதிவுகளை இடுவது வழக்கம். இதனால் சமீப காலமாக அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார். ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் ஒரு எல்லையை பகிர்ந்து கொள்வதாக அந்த வீடியோவில் இம்ரான் கான் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் எல்லையில் உள்ள தொழிற்சாலைகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வலுப்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையேயான தொலைவு சுமார் 9 ஆயிரம் கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை வெளியிட்டு, 'கடவுளே...நல்ல வேளையாக இம்ரான் கான் எனக்கு புவியியல் பாட ஆசிரியராக வரவில்லை' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த டீவீட்டை பலர் ஷேர் செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT