ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.


அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
நரேஷ் கோயலுக்குச் சொந்தமாக தில்லி மற்றும் மும்பையில் உள்ள இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. 
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பெருநிறுவனங்கள் துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி சட்ட விதிகளை மீறியதற்கான கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, அதன் நிறுவனர் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. 
தில்லியிலும், மும்பையிலும் அவருக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது என்றார் அந்த அதிகாரி.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நரேஷ் கோயல் கடந்த மார்ச் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். முழு வீச்சுடன் இயங்கி வந்த அந்த விமான நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.
தற்போது, திவால் சட்டத்தின் கீழ், அந்த விமான நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து, வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com