முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிரான வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க சிலர் முத்தலாக் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நடைமுறையை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இருப்பினும், அந்த நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.  எனவே, சட்டரீதியில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com