இந்தியா

ராஜீவ் காந்தி ஆட்சியில் இந்தியா வலுவடைந்தது: ராகுல் பெருமிதம்

23rd Aug 2019 01:21 AM

ADVERTISEMENT


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சியின்கீழ் பஞ்சாப், அஸ்ஸாம், மிஸோரம் மாநிலங்கள் தொடர்பாக கையெழுத்தான ஒப்பந்தங்களால் இந்தியா வலுவடைந்தது என்று அவரது மகனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியின் 75-ஆவது பிறந்த தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ராஜீவ் காந்தி செய்த புரட்சியை சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், சுட்டுரையில் ராகுல் காந்தி வியாழக்கிழமை மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் அவர், ராஜீவ் காந்தி செய்த பல்வேறு சாதனைகளில், பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் மிஸோரம் ஒப்பந்தங்களும் அடங்கும். இதனால் பல ஆண்டுகால வன்முறை, மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு, அமைதி ஏற்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தங்களால், இந்தியா வலுவடைந்தது என்று தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT