மோடி நலமா? நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவில் 50,000 பேர் முன்பதிவு

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கும் மோடி நலமா? என்ற பெயரிலான மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க
மோடி நலமா? நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவில் 50,000 பேர் முன்பதிவு


அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கும் மோடி நலமா? என்ற பெயரிலான மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்திய-அமெரிக்கர்களுக்கான இந்த மாநாடு, டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, மாநாட்டு ஏற்பாட்டாளரான டெக்ஸாஸ் இந்தியா அமைப்பினர் கூறியதாவது:
மோடி நலமா? மாநாட்டுக்காக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்க எந்தக் கட்டணமும் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம். வடக்கு அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் நேரடியாக உரையாற்றும் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது அமையும். இதேபோல், போப் பிரான்சிஸ் தவிர்த்து, பிற நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் உரையாற்றும் மிகப் பெரிய நிகழ்ச்சியாகவும் இது இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு வருகை தரவிருக்கிறார். செப்டம்பர் 27-ஆம் தேதி ஹூஸ்டன் நகருக்கு வரும் அவர், தொழில்துறையினரையும், அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் இந்திய - அமெரிக்கர்கள் உள்ளனர். அமெரிக்காவின் எரிசக்தித் தலைநகராக விளங்கும் ஹூஸ்டனில் மட்டும் சுமார் 1.3 லட்சம் இந்திய - அமெரிக்கர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com