பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: மத்திய நீர்வளத் துறை அமைச்சர்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாய்ந்தோடும் நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறாத வகையில்
கஜேந்திர சிங் ஷெகாவத்
கஜேந்திர சிங் ஷெகாவத்


இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாய்ந்தோடும் நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறாத வகையில் தொடங்கப்பட்டுவிட்டது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாய்ந்தோடும் பல்வேறு நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கான பணிகள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. எப்படி இதை செய்யப்போகிறோம் என்பதே முக்கியம். எல்லைப் பகுதிகளில் பாய்ந்தோடும் நதி நீரை வேறு வழியாக ராவி நதியில் சேரும் வகையில் திருப்பி விடப்போகிறோம். போதிய மழை இல்லாத பருவத்தில் அதை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் முழு கொள்ளவுடன் உள்ளது. அணைகள் கட்டப்பட்டது மின்சார உற்பத்திக்காக மட்டுமல்ல. நீரைத் தேக்கி வைப்பதற்கும், அதை உரிய பருவத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காகவும்தான் என்றார் கஜேந்திர சிங் ஷெகாவத்.
1960ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி, சிந்து நதி நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒப்பந்தப்படி, பியாஸ், ராவி, சட்லஜ் ஆகிய நதிகளை இந்தியாவும், சிந்து, செனாப், ஜீலம் ஆகிய நதிகளை பாகிஸ்தானும் கட்டுப்படுத்த வகை செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நதிகள் அதிக நீரைப் பெற்றுக் கொண்டது எனும் பட்சத்தில், சிந்து, செனாப், ஜீலம் ஆகிய  நதிகளின் நீரை இந்திய அரசு, நீர்ப்பாசனம், மின்சார உற்பத்தி உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்திக் கொள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com