காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு 

ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அரசியல் சட்டப் பிரிவு 370- ன் வாயிலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் பொருட்டு படிப்படியாக அங்கு பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் காஷ்மீரில் 18-வது நாளாக செல்போன் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

பொது வாகனப் போக்குவரத்து இயங்கவில்லை. சந்தைப்பகுதிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது வரை காஷ்மீர் எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற வில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாடகை கார்களும் ஆட்டோ ரிக்ஷாக்களும் எப்போதும் பரப்பரப்பாக இயங்கி வருகின்றன.  பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இயல்பான அளவில் இருப்பதை காண முடிகிறது.  அரசு அலுவலங்களிலும் ஊழியர்கள் வருகை எப்போதும் போல் காணப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com