நிலவின் வட்டப்பாதைக்குள் சென்றடைந்தது சந்திரயான்-2

நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 
நிலவின் வட்டப்பாதைக்குள் சென்றடைந்தது சந்திரயான்-2

நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. புறப்பட்ட விண்கலத்தை மார்க்-3 ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில்  நிலைநிறுத்தியது. 

அதன் பிறகு சந்திரயான்-2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து சற்று விலகி, நிலவை நோக்கி 6 நாள்களாக பயணித்து வந்த சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று சென்றடைந்தது.

விண்கலத்தின் இந்த சாதனைப் பயணம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், 22 நாள்கள் புவி சுற்றுப்பாதையில் சுற்றிவந்தது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றடைந்தது. 

பூமியில் இருந்து 28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விண்கலம், செப்டம்பர் 1-ஆம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்றுவட்டப் பாதையின் அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படும்.

பின்னர், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று விண்கலம் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வரும். அப்போது இரண்டு முறை அதன் சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com