தேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் வெளியீடு

மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான கொள்கை விரைவில் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் வெளியீடு


மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான கொள்கை விரைவில் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நீதி ஆயோக் அமைப்பின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலை தெரிவித்தார். மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் லட்சியத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நீதி ஆயோக் ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக, நீதி ஆயோக் அமைப்பும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் விரைவில் கூடி விவாதிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கையை எடுப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்குப் பிறகு, குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக சலுகைகளை அறிவிக்கலாம் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர். 
ஏற்கெனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையிலான ஆணையம் கடந்த 2000-ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான அரசு நிராகரித்து விட்டதையும் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டினர் என்று நீதி ஆயோக் வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 145.2 கோடியாக இருக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் பிரதமர் மோடி, மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com