திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

மகாராஷ்டிரத்தில் விபத்து: 13 பேர் பலி

DIN | Published: 20th August 2019 01:44 AM


மகாராஷ்டிரகத்தில் அரசுப் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் மமோதிக் கொண்ட விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 15 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நந்தூர்பார் மாவட்டத்தின் ஷஹாதா நகரில் இருந்து அரசுப் பேருந்து பயணிகளுடன் ஒளரங்காபாதை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. 
துலே மாவட்டத்தில் உள்ள நிம்குல் கிராமத்துக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரே, பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் இரு குழந்தைகள், இரு பெண்கள் உள்பட 11 பேர் இறந்தனர். படுகாயமடைந்த இருவர் துலே நகர மருத்துவமனையில் இறந்தனர். காயமடைந்த மற்ற 11 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் இந்த விபத்தில் இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் 12075 கிளார்க் வேலை
தேவைப்பட்டால் ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்யத் தயார்: ரஞ்சன் கோகாய்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
74 வயது குறைந்ததாக உணர்கிறேன், என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரம் குறித்து தான்: ப.சிதம்பரம்