நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணைகளில் நல்ல தீர்வு: உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

நீதிமன்றங்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணைகளில் நல்ல தீர்வு: உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

நீதிமன்றங்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதிபதி சந்திரசூட், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
அவரிடம், பெலுகான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிபதி அளித்த பதில்:
ஒரு நீதிபதி என்ற முறையில், ஒரு வழக்கில் ஆதாரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுப்பது மிகுந்த வேதனையை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. இது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுதான் பெலுகான் கொலை வழக்கிலும் நடைபெற்றுள்ளது. அந்த வழக்கில் போலீஸார் போதிய அளவில் விசாரணை நடத்தாமல் இருந்திருக்கலாம். அல்லது விசாரணையை வெற்றிகரமாக முடிக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கலாம்; ஒருவேளை விசாரணையை வேண்டுமென்றே முடித்திருக்கலாம். போலீஸ் விசாரணையின் முடிவுகளைக் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டும்போது நீதிமன்றங்களை நாடினால், வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் கண்காணிக்கும். இவ்வாறு நீதிமன்றங்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் நல்ல தீர்வுகள் கிடைத்துள்ளன.
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை திசை மாறி சென்று விடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக, உச்சநீதிமன்றம் கண்காணித்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இருப்பினும் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன என்றார் நீதிபதி சந்திரசூட்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி, பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது பெலுகானும், அவரது மகனும் பசுப் பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டனர். 
இதில், பலத்த காயமடைந்த பெலுகான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் ராஜஸ்தான் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை விடுவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com