தனித்தன்மையை இழந்து விட்டது காங்கிரஸ்:  பூபிந்தர் சிங் ஹூடா

காங்கிரஸ் கட்சி அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது என்று அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய
தனித்தன்மையை இழந்து விட்டது காங்கிரஸ்:  பூபிந்தர் சிங் ஹூடா

காங்கிரஸ் கட்சி அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது என்று அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையும் அவர் வரவேற்றுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கும் முடிவில் அவர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும், மத்திய பாஜக அரசை ஆதரித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், ரோத்தக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையுடன் செயல்படவில்லை. அது, தனது தனித்தன்மையை இழந்து விட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு காங்கிரûஸச் சேர்ந்த பல சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசு ஏதாவது நல்லது செய்தால், அதை ஆதரிப்பவன் நான். காஷ்மீரில் நமது சகோதரர்கள், ராணுவ வீரர்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை ஆதரிக்கிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் பிறந்தவன் நான். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்ப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நமது பாரம்பரியத்துக்கும், கொள்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால், அதை எதிர்த்து போராட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com