விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு மும்பை சிறை தயார்: மகாராஷ்டிர மாநில சிறைத் துறை ஐ.ஜி. 

விஜய்மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கு மும்பை மத்திய சிறையில் அறைகள் தயார் நிலையில் உள்ளன என, மகாராஷ்டிர மாநில சிறைத் துறை ஐ.ஜி. தீபக் பாண்டே தெரிவித்தார்.
மதுரை மத்திய சிறையில் உள்ள  செடிகள் விற்பனை மையத்தை பார்வையிடுகிறார் மகாராஷ்டிர மாநில சிறைத் துறை தலைவர் தீபக் பாண்டே. உடன் மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி. த. பழனி,  கண்காணிப்பாளர் மா. ஊர்மிளா.
மதுரை மத்திய சிறையில் உள்ள  செடிகள் விற்பனை மையத்தை பார்வையிடுகிறார் மகாராஷ்டிர மாநில சிறைத் துறை தலைவர் தீபக் பாண்டே. உடன் மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி. த. பழனி,  கண்காணிப்பாளர் மா. ஊர்மிளா.

விஜய்மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கு மும்பை மத்திய சிறையில் அறைகள் தயார் நிலையில் உள்ளன என, மகாராஷ்டிர மாநில சிறைத் துறை ஐ.ஜி. தீபக் பாண்டே தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளின் கட்டமைப்புகள், சிறைத் துறையினரின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள அவர் மதுரைக்கு சனிக்கிழமை வருகை தந்தார். அவர், மதுரை மத்திய சிறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அதிகாரிகளிடம் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலை கட்டடங்களை காவலர் வீட்டு வசதி வாரியம் சிறப்பாக பராமரித்து வருகிறது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைக் கட்டடங்களை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் ஆந்திரம் மாநிலங்களைப் போன்று மகாராஷ்டிராவிலும் சிறைச்சாலை கட்டடப் பராமரிப்பு, காவலர் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
தமிழகத்திடம் கற்றுக்கொள்ளவேண்டும்: மத்திய சிறைச்சாலைகளின் அருகில் மாவட்ட சிறைச்சாலைகளை ஏற்படுத்தியதன் மூலம் கைதிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்து, தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், மும்பையில் இவ்வாறில்லை. கைதிகளின் எண்ணிக்கையை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து தமிழக சிறைத்துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடி உள்ளேன்.  தமிழகத்தைப் பார்த்து, மகாராஷ்டிர சிறைத் துறை நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்தை போன்று மகாராஷ்டிரத்திலும், சிறைச்சாலைகளில் மாற்றம் கொண்டுவர அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழக சிறைத்துறை முன்னோடியாக உள்ளது. அடுத்தபடியாக, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் உள்ளன. 
விஜய் மல்லையாவுக்கு தயார் நிலையில் சிறை: தற்போது விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கு மும்பை சிறையில் சர்வதேச விதிமுறைகளுக்குள்பட்டு அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சிபிஐ நீதிமன்றம் மூலம் லண்டன் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும், நாம் அளித்த தகவல்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உலகத் தரம் குறித்து அறிந்துகொள்ள சிறிய குழுவை லண்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அனுப்ப அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார். மதுரை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. த. பழனி, மதுரை மத்திய சிறைக் காவல் கண்காணிப்பாளர் மா. ஊர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com